-:-
Untitled Document
இலங்கை
Local News (உள்ளுர் செய்திகள்)
  • அச்சுவேலி, காட்ட மலை கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (8-6-2006) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 25 தினங்கள் நடைபெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி செசவ்வாய்க் கிழமை மஞ்சத்திருவிழாவும், 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாம்பழத்திருவிழாவும், மாலை கைலாச வாகனத்திருவிpழாவும், 30 ஆம் திகதி கார்த்திகைச் சப்பறமும், ஜீலை மாதம் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இரதோற்சவமும், 2 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.

  • கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று(8-6-2006) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 10 ஆம் திகதி மஞ்சத்திருவிழாவும், 14 ஆம் திகதி கைலாச வாகனத்திருவிழாவும், 16 ஆம் திகதி சப்பறத்திருவிழாவும், 18 ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 18 ஆம் திகதி தீர்த்தோற்சவமும், 19 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு ப10ங்காவனத் திருவிழாவும,; நடைபெறவுள்ளன.

  • யாழ் நயினை நாகபூசனி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்  04.06.2008 அன்று கொடியெற்றத்ததுடன் ஆரம்பம்

  • ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஈ.எஸ் சக நிறுவனம் ஆதரவில் நடாத்தும் 30 ஓவா மட்டுப்பட்படுத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று(17.5.2008) யாழ் இந்து மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது

  • யாழ். ஆஸ்பத்திரியில் இருதய நோயாளர்களுக்கு தனியான சிகிச்சைப்பிரிவு வார்ட் திறந்துவைப்பு

    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிகள் யுத்த சூழலால் பின்தள்ளப்பட்ட போதிலும் தற்போது அதன் அபிவிருத்திப் பணிகள் படிப்படியாக வளர்ச்சிபெற்று வருவதாக, வைத்தியசாலையின் இருதய நோய்ச் சிகிச்சைப்பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் பி.லக்ஷ்மன் தெரிவித்தார். அமரர் ஹண்டி ஞாபாகார்த்த இருதய நோய்ச்சிகிச்சைப்பிரிவு வார்ட் திறந்து வைக்கப்பட்ட பின்னர் இடம் பெற்ற வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்று (18.05.2008) ஞாயிற்றுக்கிழமை இந்த வைபவம் இடம்பெற்றது

  • வரலாற்று புகழ்மிக்க பெரியகல்லாறு கடல் நாச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு

    மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே அமைந்துள்ள மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லையாக் கருதப்படும் கல்வியாறு என போற்றப்படும் பெரியகல்லாறு பிரதேசத்தில் அருள்பாலித்துவரும் கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஒருநாள் சடங்கு இன்று(19.05.2008) திங்கட்கிழமை வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது

  •  சங்கானை தொட்டிலடி சனசமூகநிலையமும் கலைச்செல்வி கலாமன்றமும் இணைந்து நடத்தும் பௌர்ணமிக்கலைவிழாவும் கையெழுத்து சஞ்சிகை வெளியீடும்  செவ்வாய்கிழமை (20.05.2008) பி.ப.1 மணிக்கு தாட்டிலடி கண்ணணன் மண்டபத்தில் நடைபெறும்

 

இந்தியா

 

 
Copyright 2003- 2010 Speed IT net, All rights reserved. Tel:+94777563213 / +94214591871 /+94212228358
Terms and Conditions | Privacy and Return Policy | Contact